ஆயுர்வேத


AYURVEDIC MEDICINE WEBSITE DESIGNஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேதம் வாழ்க்கையின் விஞ்ஞானம். 'ஆயுர்' என்றால் வாழ்க்கை; வேதம் என்றால் அறிவு, ஞானம். 'சாங்கிய' வேதாந்தத்தை தழுவியவை ஆயுர்வேத கோட்பாடுகள். வியக்தி (வெளிக்காட்டு) வெளிப்பாடில்லாத 'அவியக்தி'யிலிருந்து உருவானது. மனிதனும் பிரபஞ்சமும், பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்ற கால சக்கரத்திற்கு உட்பட்டவை. ஆரோக்கியம் என்பது உடல், புலனேந்திரியங்கள், மனம், ஆத்மா ஆகியவை ஒரே ஒழுங்கில் சீராக அமைவது. உள்ளும், புறமும், உடலும் வெளி எண்ணங்களும் ஒன்றுபட்டு, ஒன்றை ஒன்று சீராக சார்ந்திருப்பது ஆரோக்கியம்.

ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேத சிகிச்சையின் அடிப்படை கொள்கை
உடல் சிகிச்சை - உணவு, பத்தியம், மூலிகை மருந்துகள், உடற்பயிற்சி ஆகியவை தேவை.

மன சிகிச்சை - மனத்தை சமநிலையில் நிறுத்த, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தேவையான வழிமுறைகள் பரிந்துரைக்கப்படும்.

உடலுள் உறையும் "ஆத்மா"விற்கு - ஆன்மிக பயிற்சி பரிந்துரைக்கப்படும்.

ஆயுர்வேதம் இயற்கையின் நடப்புகளை சூரிய உதயம், சூரியன் மறைதல், பருவ காலங்கள், சீதோஷ்ண நிலை, பிறப்பு, இறப்பு ஆகியவற்றோடு இணைந்ததாக மருந்துகள், உணவு மாற்றங்கள், வழிமுறைகள் இவற்றை எல்லாமே சிகிச்சை முறையில் கையாளுகிறது.

மேலும் படிக்க -Read more

Posted in « SIddha MedicineEnglish சித்தமருத்துவம்தமிழ் »